பிரபல நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நெருங்கிய ஒருவரை இழந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார் இந்த செய்தி திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா இவர் முதன்முதலில் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நலனும் நந்தினியும் புளி, உப்பு கருவாடு, இடம் பொருள் எவல், அஞ்சல என தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
என்னதான் இவர் பல தமிழில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி நெஞ்சம் மறப்பதில்லை ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது இதனை தொடர்ந்து எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் பலமுறை இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தியை பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் வெளியிட்ட செய்தியானது நான் என்னுடைய அப்பாவை இழந்து விட்டேன் மிஸ்டர் சிவா சுவாமி வயது 54 இன்று மறைந்துவிட்டார் என கூறியுள்ளார் இதைப்பார்த்த நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிக்கவும் நந்திதா ஸ்வேதா எப்பொழுதும் நாங்கள் உன்கூடவே இருப்போம் என ஆறுதல் கூறி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
sorry nandita his blessings ll always be ther for u.
— aishwarya rajesh (@aishu_dil) September 19, 2021