ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி பேசி அரங்கையே அதிர வைத்த நந்திதா வைரலாகும் வீடியோ.!

Nandita

தமிழ் திரையுலகில் சிம்பு நடிப்பில் தற்போது ஈஸ்வரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிட உள்ளது என சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது மேலும் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் வரும் பொங்கல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்கள் முன்பு வெளியானது.

இந்நிலையில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமிபத்தில் சென்னையில் எக்மோரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு அதிக ரசிகர்கள் வந்துள்ளார்கள் மேலும் ஈஸ்வரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை தான் நந்திதா இவர் இந்த நிகழ்ச்சியின்போது ஒரு தகவலை கூறியுள்ளார்.

அதில் நான் தமிழ் சினிமாவில் சாதிக்க விரும்பியது நான்கு சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது மட்டுமே அதில் ஒன்று தளபதி விஜய் என கூறியதும் அங்கு இருந்த ரசிகர்கள் திரையரங்கம் அலரும் படியாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இதனையடுத்து அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ காணொளி.