“நந்தா படம்” சூர்யாவுக்கான படமே கிடையாது.? முதலில் நடிக்கவிருந்த இரண்டு நடிகர்கள் – யார் தெரியுமா.?

nandha
nandha

இயக்குனர் பாலா தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான திரை கதைகளை வைத்து படங்களை இயக்கி வெற்றிகொண்டு வருகிறார். பாலா இதுவரை சேது, நந்தா, அவன் இவன், பரதேசி, பிதாமகன், நாச்சியார் என சொல்லிக் கொண்டே போகலாம்..

இருப்பினும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் என்றால் அது நந்தா தான் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகியது. நந்தா திரைப்படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து லைலா, சூர்யா, ராஜ்கிரண், ஷீலா கவுர், கருணாஸ், நந்தா சரவணன், வினோத் கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், சங்கீதா ராமசாமி என பலர் நடித்து அசத்து இருந்தனர்.

இந்த படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இயக்குனர் பாலா இந்த படத்தில் முதலில் சூர்யாவையே நடிக்க வைக்க முயற்சிக்கவில்லையாம்.

இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு இயக்குனர் பாலா அஜித்திடம் இந்த கதையை கூறி உள்ளார். அவர் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்காமல் போனதை எடுத்து சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதேபோல ராஜ்கிரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை இருந்தது சிவாஜி கணேசன் தானாம்.

அவரும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் ஹீரோ கதாபாத்திரத்தில் சூர்யாவும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  நடிகர் சூர்யாவுக்கும் சரி, ராஜ் கிரணுக்கும் சரி தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.