தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் சில காலங்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் நண்பன் இத்திரைப்படத்தில் தளபதி விஜய் மட்டுமின்றி ஸ்ரீகாந்த் ஜீவா போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள் இதில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் தளபதி விஜய் இடம் கோக்குமாக்கா கேள்வி கேட்டு காமெடி செய்பவர்தான் மில்லிமீட்டர் இவர் தற்போது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார்.
இந்த திரைப்படத்தில் நடித்த மில்லி மீட்டரில் உண்மையான பெயர் ரின்சன் சைமன். இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்கிய நமது பிரமாண்ட இயக்குனர் சங்கர்தான். சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் மில்லி மீட்டரை புதிதாக அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் நமது இயக்குனர்.
மில்லி மீட்டருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டாம். மேலும் இவருக்கு நடிப்பது மட்டுமின்றி நடனத்திலும் ஆர்வம் அதிகம் இருப்பது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் பாய்ஸ் கேர்ள்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
சுட்டகதை, நளனும் நந்தினியும், ரெட்டைசுழி, நண்பன், பா பாண்டி பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதை தொடர்ந்து மில்லிமீட்டர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகள் தானும் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ஜாபர் இவர் சமீபத்தில் வெளியான பாவ கதைகள் என்ற தொடரில் நரிக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் மில்லி மீட்டர் மற்றும் நரிக்குட்டி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு செம கெத்தாக இருக்கிறீர்கள் என அவர்களை கலாய்த்து வருகிறார்கள்.