Namitha dance : நடிகை நமிதா தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், ரசிகர்களுக்கு மிகச் செல்லமாக நடிகை என்றால் அது நமீதாதான் ஏனென்றால் இவர் மச்சான்ஸ் என கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டார்.
தமிழில் தொடர்ச்சியாக நடித்து வந்த இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார், அதனால் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் மலையாளம், தெலுங்கு என பிற மொழித் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். பின்பு ஒரு காலகட்டத்தில் எந்த மொழியிலும் பட வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார், அவர் திருமணத்திற்கு பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அமைந்தாலும் அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரின் கதாபாத்திரம் இல்லை.
எனவே இவர் மற்ற நடிகைகள் போல் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் இறங்குவார்கள் அந்த வகையில் நடிகை நமீதாவும் டிவி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய ரகசியத்தை அவரே கூறியுள்ளார் அவர் கூறியதாவது தான் ஏழு வருடங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டதாகவும் ஆனால் அதை அரங்கேற்றம் செய்ய வில்லை எனவும் இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது இப்பொழுது நான் கூறுகிறேன் என அந்த நிகழ்ச்சியிலேயே கூறியுள்ளார்.
பல வருடங்களுக்கு பின் பரதநாட்டியம் ஆடிய நமிதா!? #Throwback #DJD #ZeeTamil
Zee Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಏಪ್ರಿಲ್ 27, 2020