நடிகை நமிதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன்முதலாக எங்கள் அண்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் சினிமாவிற்கு முதன் முதலில் தெலுங்கு படத்தின் மூலம்தான் அறிமுகமானார். எங்கள் அண்ணா திரைப்படத்தை தொடர்ந்து மகா நடிகன் இங்கிலீஷ்காரன். என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக வளம் வரும் அஜித் விஜய், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், ஆகியோர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதா பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்க்க ஆரம்பித்தார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகவும் பங்கேற்றார். இதற்கு மேல் பட வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ என எண்ணி 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய காதலர் ரவீந்திர சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்பு ஏதாவது அமையாதா என போராடி வந்தார் ஆனால் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார் சிறிது காலம். பின்பு பாஜக கட்சியிலும் சேர்ந்தார் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக தீவிர பிரச்சாரம் செய்தார். மேலும் நமீதா தற்போது 40 வயதை கடந்துவிட்டார் இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.