கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எனக்கு இரட்டைக் குழந்தை என்ற மங்களகரமான அறிவிப்பை வெளியிட்ட நமீதா.! வைரலாகும் வீடியோ.

nameetha
nameetha

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் இவர் கடந்த வருடம் தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் பிரகனண்ட் ஆக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. ரசிகர்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள்.

தனக்கு இரண்டு குழந்தை பிறந்துள்ளதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறினார்கள் நடிகை நமீதா அவர்களும் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நேற்று சமூக வலைதளத்தில் தனக்கு இரட்டை குழந்தைகள் என்பதை அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அந்த வீடியோவில் நமிதா தன்னுடைய கணவருடன் இருக்கிறார்.

மேலும் நமிதாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள் என்பதை அவர் சந்தோஷத்துடன் அறிவித்துள்ளார் நமீதா 2010ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்களுடன் ஜோடியாக எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து அழகிய தமிழ் மகன் பில்லா என முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதில் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய் உடன் தன்னுடைய சிறந்த நடிப்பு வெளிப்படுத்தினார் அதை போல் அஜித் உடனும் பில்லா திரைப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை.

ஆனால் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில்  நடுவராக பங்கேற்று வந்தார். இவர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள் இந்த நிலையில் சமூக வலைதளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமிதா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் அந்த வகையில் தான் தற்போது தனக்கு இரட்டை குழந்தை இருப்பதை வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்