சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பது அனைத்து இடங்களிலும் இருந்து வருகிறது. பல நடிகைகள் அட்ஜஸ்மென்ட் செய்ததால் சினிமாவில் பிரபலம் அடைந்திருப்பதாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். அப்படி ஒரு சில நடிகைகள் தங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வரும் நேரத்தில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிக்க தொடங்கி விடுகின்றனர்.
அப்படி சிறந்த நடிப்பு திறமை இருந்தும் கிளாமர் நடிகையாக மட்டுமே நடித்தவர்தான் நடிகை நமீதா. தற்பொழுது இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். இந்நிலையில் இதன் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வந்தாலும் கூட இவர் ஒரு கிளாமர் நடிகை என்று அடையாளமும் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை நமிதாவின் கணவர் யாரும் நமீதாவை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவரை கிளாமருக்காக, கமர்சியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும், அவரது நடிப்பு திறமையை யாரும் வெளிப்படுத்தவில்லை என்றும் வீரேந்திர சவுத்ரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ‘பவ் பாவ்’ என்ற திரைப்படத்தினை தயாரித்து வரும் வீரேந்திர சவுத்ரி இந்த படத்தில் தன்னுடைய மனைவி நமிதாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இவ்வாறு கிளாமர் மட்டும் இன்றி ஒரு நல்ல நடிப்புத் திறமை உள்ள நமிதாவை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகை நமிதா பார்வை திறன் குன்றிய ஒருவர் நாயின் துணையுடன் கார் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
அதேபோன்ற ஒரு காட்சி தன்னுடைய படத்தில் வருவதாகவும் தனது படம் விலங்குகள் நல பிரியர்களுக்கு உகந்த படம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை தங்கள் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் நமீதா கூறி உள்ள நிலையில் ஒரு வித்தியாசமான கான்செப்ட் கொண்ட இந்த படம் உருவாகி இருப்பதாகவும் என் மனதிற்கு மிகவும் உகந்த படமாக அமைந்துள்ளதாகவும் நமீதா தெரிவித்துள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.