நடிகை நமிதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன்முதலாக விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய எங்கள் அண்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வர ஆரம்பித்தார் அதேபோல் தான் நடித்து வந்த குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர். இந்த நிலையில் நமீதா மச்சான் என கூறினாலே ரசிகர்கள் கத்துவார்கள் அந்த அளவு ரசிகர்களுக்கு நமிதாவை பிடித்துவிட்டது.
இந்த நிலையில் நமிதா அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் தொலைக்காட்சி பக்கம் தனது திசையை திருப்பினார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நமீதா நடுவராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் இந்த நிலையில் தான் காதலித்து வந்த விரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமிதா திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக எந்த ஒரு திரைப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த நமீதா தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தில் அப்புகுட்டி, மனோபாலா, நாடோடிகள் கோபால் ஜாகுவார் தங்கம், மாரிமுத்து உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் இந்தத் திரைப்படத்திற்காக தான் நமிதா தன்னுடைய உடல் எடையை 10 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார்.
சமீபகாலமாக தெலுங்கில் கிளாமர் தூக்கலாக நடித்து வந்த நமீதா ஒரு காலகட்டத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.