எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன்.!நகுல் வெளியிட்ட மிரட்டலான புகைப்படம்!!

nakul

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மீனா, இவரது தம்பி நகுல் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.. இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு படமான கிளு குறம் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாக போகிறேன், நாரதன், செய் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் அவர் பின்னணி பாடகராகவும் பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் வெளிவந்த படம் பாண்டியன், படத்தில் காதல் யானை என்ற பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கஜினி வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை என பல படங்களில் பாடி உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காதலி சுருதியை இவர் திருமணம் செய்து கொண்டார்.பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் நடுவராக தற்பொழுது பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

nakul
nakul

தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர். தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், பழைய போட்டவுடன் தற்போது இருக்கும் போட்டோவை இனைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நகுல். இதனை பார்த்த ரசிகர் மற்றும் பிரபலங்கள் பாய்ஸ் நகுலா இது என ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை பார்த்து வருகின்றன.