Nakshathra nagesh : சின்னத்திரையில் தொகுப்பாளனியாகவும் சீரியல் நடிகையாகவும் குணசத்திர நடிகையாகவும் வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு சேட்டை என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்திலும் புலிவால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். என்னதான் அழகாக இருந்தாலும் இவருக்கு குணசித்திர வேடம் மட்டுமே கிடைத்து வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது சின்ன திரையில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் மோசமான ப்ரொபோஸ் ஏதேனும் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நட்சத்திர நாகேஷ் ஒரு முறை ஒரு தாத்தா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணினார் அப்பொழுது அவர் என்னை தொடர்பு கொண்டார் என்னுடைய நடிப்பு நிகழ்ச்சிகள் என அனைத்தையும் பார்ப்பாராம் அதனை கூறிய உடன் நான் நன்றி என தெரிவித்தேன் ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர் பேசும்பொழுது என்னுடைய அழகை வர்ணிக்க ஆரம்பித்தார்.
அவர் வயதுக்கு மீறிய பேச்சாக இருக்கிறது என நினைத்தேன் ஆனால் அவர் தொடர்ந்து என் கனவில் நீங்கள் வருவீர்கள் என பேச ஆரம்பித்தவுடன் அவரின் பேச்சுகள் எல்லை மீறியது உடனே அவரை நான் பிளாக் செய்து விட்டேன் மோசமான நபர் என்றவுடன் எனக்கு அந்த தாத்தா தான் நினைவுக்கு வருகிறார் உண்மையாலும் அவர் தாத்தா தானா அல்லது வேறு யாராவது புகைப்படத்தை வைத்து அவ்வாறு பேசினார்களா என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.