பொதுவாக ஒரு மொழியில் படமாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். அந்தவகையில் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நாகினி சீரியல் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த சீரியலின் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஹிந்தியில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றதோ அதே போல் தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மௌனி ராய்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்த சீரியலின் முதல் பாகத்தினை தொடர்ந்து பல பாகங்கள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் அதிகப்படியான காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் தற்பொழுது உள்ள இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது.
இந்த சீரியலில் மௌனி ராய்க்கு கிடைத்த நல்ல வரவேற்பு மற்றும் நடிகர் நடிகைகளுக்கு கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இதன் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இளசுகளின் மனதை பஞ்சராக்குவது போல தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதாவது மௌனி ராய் நீண்ட காலங்களாக காதலித்து வந்த துபாய் தொழிலதிபரான சுராஜ் நம்பியாரை விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சுராஜ் நம்பியார் மிடில் கிளாஸ் ஃபேமிலி சேர்ந்தவர்தான் தனது சொந்த உழைப்பால் தொழிலதிபராக வளர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.பிறந்தது வளர்ந்தது அனைத்தும் பெங்களூரில் தான். இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் துபாய் அல்லது இத்தாலியில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.