தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை சமந்தா அதன் பிறகு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதேபோல நடிகர் நாக சைதன்யாவும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும்.. சில நடிகைகளுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து பெரிய அளவில் பேசப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகை ஒருவருடன் நடிகர் நாகசைதன்யா..
டேட்டிங் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். நாக சைதன்யா ஷோபிதா தூளிபாலா என்ற நடிகையுடன் கடந்த நாட்களாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான மேஜர் படத்தில் இந்த நடிகை நடித்திருந்தார்.
இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகர் நாக சைதன்யாவும், இளம் நடிகை ஷோபிதா தூளிபாலாவும் அடிக்கடி சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நாகசைதன்யா தற்பொழுது ஜிப்லி ஹெல்ப் பகுதியில் ஒரு வீடு கட்டி வருகிறார் அந்த வீட்டிற்கு அவர்கள் ஒன்றாக வந்ததாகவும்..
அதிக நேரம் அங்கு பேசிவிட்டு அவர்கள் ஒரே காரில் கிளம்பி சென்றதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன நாகசைதன்யா – ஷோபிதா தூளிபாலா இருவரும் டேட்டிங் செய்வதாக வெளிவரும் செய்திகள் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.