சினிமாவைப் பொறுத்தவரை பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து செய்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சினிமாவில் விவாகரத்து என்பது அதிக அளவில் இருந்து வருகிறது அப்படி நட்சத்திர ஜோடிகளாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா இந்த ஜோடிகள் காதலித்து தங்களுடைய பெற்றோர் சமதத்துடன் மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் கௌதமேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது எனவே திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தெலுங்கு ரீமேக்கில் ஏ மாய சேசாவே என்ற டைட்டில் வெளியானது. இந்த படம் தற்பொழுது வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான ட்விட்கள் வைரலாக இதனை பார்த்த சமந்தா எப்பொழுதும் தன் மீது அன்பு காட்டும் ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நாக சைதன்யா ஏ மாய சேசாவே பட ஸ்டில்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். அதில் ஜெசி தன்னை காதலித்ததும், பிரேக்கப் செய்து காயப்படுத்தியதும் இன்னும் மறக்கவில்லை என்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருக்கிறது. எனவே இதனை பார்த்து ரசிகர்கள் சமந்தா பாவம் தனியாக கஷ்டப்படுகிறார்.
மையோசிடிஸ் என்னும் அரியவகை நோயுடன் போராடி வருகிறார். எனவே தயவு செய்து அவருடன் சேர்ந்து வாழுங்கள் உங்களுக்கு அவர் ரீல் ஜோடி மட்டுமல்ல ரியல் ஜோடியும் சமந்தா தான் உங்களை மீண்டும் சேர்த்து பார்க்க ஆசைப்படுகிறோம் என தெரிவித்து வருகின்றனர்.