தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. சினிமா உலகில் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் கிடைக்கின்ற வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்டினார்.அது அவருக்கு ஒரு கட்டத்தில் பல குடைச்சல்களை கொடுத்தாலும் ஒருவழியாக வெப்சீரிஸ்களில் நடித்து முடித்தார்.
ஆனால் அது மீடியா உலகத்தையும் தாண்டி அவருக்கு சில பிரச்சனைகளை கொடுத்தது அதிலும் குறிப்பாக சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் பிரச்சினைகள் உருவாகின.நான்கு வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த இருவரும் சில பிரச்சனைகளை மட்டும் அப்படியே வைத்து ஒரு கட்டத்தில் அது பெருசா உருமாறி ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று தற்பொழுது பிரிந்துள்ளனர்.
சமந்தா இந்த விஷயத்தை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் மனசுக்குள்ளேயே வைத்து அதை முடக்க பார்க்கிறார். ஆனால் ரசிகர்களும் மீடியா பக்கமும் அவரை விடாமல் பல கேள்விகளை கேட்டு துரத்தி வருகிறது. சமந்தாவுடன் யார் யாரெல்லாம் நெருங்கி இருக்கிறார்களோ அவர்களையும் தொடர்பு படுத்தி ரசிகர்கள் மற்றும் மீடியா கேட்டது. ஆனால் சமந்தா எதுவும் பெரிதாக பதில் சொல்லமால் இருந்து வருகிறார்.விவாகரத்து பெற்ற பின் எப்படி சமந்தா வீட்டுக்குள்ளே இருந்து பின் படிப்படியாக வெளியில் வந்துள்ளார் ஆனால் நாகசைதன்யா வீட்டை விட்டு வெளியே வந்து தற்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கிக் கொண்டு இருக்கிறார்.
தற்பொழுது நாகசைதன்யா ஜூபிலி ஹில்ஸ் என்ற பகுதியில் ஒரு பங்களாவை வாங்கி இருந்தார். அந்த பங்களாவை தற்போது சீர் செய்து வருகிறார் மேலும் சமந்தா தற்போது இருந்து வரும் இடத்தை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சேர்ந்துதான் வாங்கி உள்ளனர். ஆனால் தற்போது நாகசைதன்யா அதை முழுவதுமாக சமந்தாவுக்கு கொடுத்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.