பிரபல அரசியல் முன்னாள் அமைச்சர் ஒருவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தற்பொழுது தன்னை மிரட்டி வருவதாக நாடோடிகள் பட நடிகை சாந்தினி பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில், விஜய் வசந்த், பரணி பாண்டி, அபிநயா, நமோ நாராயணா, அனன்யா, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நாடோடிகள்.
இந்த திரைப்படத்தில் வரும் காதல் ஜோடியை யாராலும் மறந்திருக்க முடியாது அந்த அளவு இந்த திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமான கதை என்றால் இந்த காதல் ஜோடி தான். அதேபோல் இந்த திரைப்படத்தில் வரும் “சம்போ சிவ சம்போ” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் திருப்புமுனையாக இந்த பாடல் அமைந்திருக்கும்.
இந்தப் பாடலில் அந்தக் காதல் ஜோடிக்கு உதவ போய்தான் சசிகுமார், வசந்த் பரணி ஆகியோர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். இந்த காதல் ஜோடியில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர்தான் சாந்தினி இவர் நாடோடி படத்திற்கு பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியாகிய 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்பொழுது சென்னையில் உள்ள கமிஷனர் ஆபீஸ் அலுவலகத்திற்கு வந்து பிரபல அரசியல் முன்னாள் அமைச்சர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சாந்தினி நான் மலேசியாவை சேர்ந்த பெண் சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தங்கி வருகிறேன் அதேபோல் மலேசியா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த பொழுது அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளேன்.
அப்படி தான் கடந்த 2017 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவரை சந்தித்தேன் அதன்பின்னர் அவர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார் நான் அழகாக இருப்பதாகவும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் கூறி வந்தார் அதுமட்டுமில்லாமல் திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் வார்த்தை கொடுத்தார். மேலும் அந்த அரசியல் பிரமுகர் என்னுடைய மனைவி எனக்கு எந்த சந்தோஷமும் கொடுக்கவில்லை எனவும் உன்னைப்போல் ஒருவர் என் வாழ்க்கையில் இருந்தால் என் வாழ்க்கை அழகாக இருக்கும் எனவும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் சட்டப்படி உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். நானும் அவரது வார்த்தையை நம்பி உறுதியளித்தேன் பின்பு காதலில் விழுந்தேன். இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம் சென்னையில் இருந்த வரை இரவு முழுவதும் என்னுடன் தான் தங்குவார். நான் வெளியில் சென்றாலே அமைச்சர் காரில் தான் செல்வேன். இருவரும் இணைந்து பல இடங்களுக்கு சென்று உள்ளோம் ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள கேட்டாள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
இதனை நம்பி இரண்டு முறை அவரால் கர்ப்பம் ஆனேன் ஆனால் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை வேண்டாம் என இருமுறையும் கருக்கலைப்பு செய்ய வைத்தார் இப்பொழுது என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல் இதை வெளியே சொன்னால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உன்னுடைய பலன வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறாராம்.
தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து உன் மீது பொய்க் கேசுகள் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாந்தினி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.