ரஜினிக்கு ஓகே சொன்ன நதியா, கமலுக்கு நோ சொல்ல இதுதான் காரணம்..! அந்த பயம் இருக்கணும்ல..!

rajini-kamal-1
rajini-kamal-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் உண்மையான பெயர் சரீனா அனுஷா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக துணை கதாபாத்திரங்களில் மட்டுமே திரைப்படத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு திரைப்படங்களில் கதாநாயகியாக களம் இறங்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் ஆனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து நதியா மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தது பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அந்த வகையில் இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது மட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாக ஆரம்பித்தது அதன்பிறகு விளம்பரங்களில் கூட நதியா ட்ரெஸ் நதியா செருப்பு நதியா சோப்பு என அவருடைய பெயரை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மராட்டியர் ஆன சீரிஸ் காட்போல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல் அவருக்கு தற்போது சனம், ஜனா என இரண்டு பெண்கள் உள்ளார்கள். இவருக்கு குழந்தை பெற்ற பிறகு வெகுநாளாக திரையில் முகம் காட்டாமல் இருந்த நடிகை நதியா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்.

kamal
kamal

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரஜினியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்க பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன ஆனால் அவை அனைத்தையுமே நடிக்காமல் மறுத்துவிட்டார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் காதல் இளவரசனாக கொடி கட்டி பறந்தது மட்டுமில்லாமல் முத்தக்காட்சி அவருடைய திரைப்படத்தில் அதிக அளவு இருந்ததுதான் இதற்குக் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.