இந்த இரண்டு திரைப்படத்தின் கதை விளங்கவே இல்லை.! தனுஷ் மற்றும் ஜீவாவின் திரைப்படத்தை தவறவிட்டு புலம்பி தள்ளும் நடிகே பரத்.!

bharath
bharath

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பரத் இவர் முதன்முதலில் ஷங்கர் இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் செல்லமே, காதல், பிப்ரவரி14, பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம்மகன், சென்னை காதல், வெயில், கூடல்நகர், பழனி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவருக்கு பெரிதாக எந்த ஒரு படமும் ஹிட் அடிக்காததால் படவாய்ப்பு குறையத் தொடங்கியது. தற்பொழுது இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன.

ராதே, நடுவன், 8, யாக்கை திரி, குரூப், சிக்ஸ் ஹவர்ஸ், காஷாணம், முனைவன் என பல திரைப்படங்கள் இருக்கின்றன இதில் நான்கு மலையாளத் திரைப்படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சில திரைப்படங்களின் தோல்வியால் விடா முயற்சியில் தன்னுடைய புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் காளிதாஸ் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களுடன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல்  சரண் குமார் இயக்கத்தில் நடுவன் திரைப்படம் முடிவடைந்துள்ளது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நடுவண் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பரதவர்கள் பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அந்தப் பேட்டியில் நீங்கள் தவறவிட்ட படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த பரத் என்னை அறியாமல் இரண்டு திரைப்படங்களை நான் தவற விட்டுவிட்டேன் அது திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் கோ. திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறும் பொழுது அந்த கதையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை படம் எப்படி வரும் என்றும் சரியாக  தெரியாத காரணத்தினால் அந்த படத்தை தவற விட்டேன்.

அதன் பிறகு தனுஷ் நன்றாக பண்ணியிருந்தார் அந்தத் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி ஹிட்டடித்தது அதேபோல் காதல் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டியது.  கோ திரைப்படமும் நான் நடிக்க வேண்டிய திரைப்படம் தான் ஆனால் என்னை மீறி கைவிட்டுப்போன திரைப்படம் எனக்கு கிடைக்காததை நினைத்து  இரண்டு மூன்று நாட்கள் என்னால் தூங்க கூட  முடியவில்லை இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது நமக்கு எழுதப்பட்டவை யாராலும் மாற்ற முடியாது எனக்கூறினார்.