தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை தற்பொழுது உள்ள நடிகைகளுக்கு தான் பட வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருகிறது அதுவும் புது புது நடிகைகள் நடிக்க வருவதால் பழம்பெரும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு உடனே கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அம்மா போன்ற மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பழம்பெரும் நடிகைகள் அளவிற்கு தற்பொழுது உள்ள பல நடிகைகளும் நடிப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் ஒரு காலத்தில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தையும் பிடித்து விட்டு தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் நடிகைதான் நதியா.
இவர் அந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
மேலும் இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்த பொழுது இவரது நடிப்பை ரசிகர்களால் தற்போது வரை மறக்க முடியாது அந்த அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக நடித்திருப்பார் மேலும் அந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து மக்களை கவர்ந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சிகள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் மேலும் இவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக பயங்கரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
— Tamil360Newz (@tamil360newz) November 20, 2021
ஆம் இவரது ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்று தற்போது கிடைத்துள்ளது இதில் பாக்ஸிங் கிளவுஸ் போட்டுக்கொண்டு இவர் பயங்கரமாக வொர்க் அவுட் செய்யும் பொழுது எடுத்த வீடியோ காணொளி போல் இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதை தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.