நடிகை நதியா 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர். அதுமட்டுமல்லாமல் நடிகை நதியா பல இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அதன் பின் நடிகை நதியா சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சிவக்குமார், பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் நடித்திருக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நதியா கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகை நதியா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நதியாவுக்கு 55 வயது ஆகியும் இப்போதும் இளம் நடிகைக்கு இணையாக இளமையாக காட்சியளிக்கிறார். அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் வயதான தோற்றத்தில் இருக்கும் நிலையில் அவர் மட்டும் இன்னும் இளமையாக காட்சியளிப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த நிலையில் நடிகை நதியா தனது சமூக வலைதளத்தில் டீன் ஏஜ் பொண்ணுக்கு இணையாக நடனம் ஆடி பதிவு செய்துள்ளார். டீன் ஏஜ் பெண்ணுக்கு நிகராக 55 வயதில் நதியா நடனமாடிய வீடியோவுக்கு ஏராளமான லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.