கிறிஸ்துமஸை கோலாகலமாக தனது குடும்பத்துடன் கொண்டாடிய நதியா இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்.!

nathiya
nathiya

80 இன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நதியா இவர் அந்த காலத்தில் எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் கொடிகட்டி பறந்து வந்தார்.

இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்களும் தற்போதும் இவரது ரசிகர்களால் மறக்கமுடியாத திரைப்படமாக தான் அமைகிறது.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில சில சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் திருமணத்திற்குப் பிறகு அதிகமாக படம் நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் நதியாவுக்கு தற்பொழுது இரண்டு மகள்கள் உள்ளார்கள் அந்தவகையில் நேற்று இவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் அதில் அவரது கணவர், மகள்கள் என குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளார் நதியா.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் நதியா மிகவும் அழகாக இருக்கிறார் என கூறிவருகிறார்கள்.