கருப்பாக இருந்ததால் அவமானப்படுத்தப்பட்ட விஜயகாந்த்.! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்.!

vijayakanth nadhiya

vijayakanth : தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் ஆக்சன் திரைப்படத்திற்கு பஞ்சமே இல்லாமல் பார்த்துக் கொண்டவர். அந்த காலகட்டத்தில் ரஜினி கமலஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்கள் இருந்த பொழுது தனக்கான இடத்தை பிடித்தவர்.

இவர் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார். அப்பொழுது சினிமாவிற்கு பல நன்மைகளை செய்து கொடுத்தவர் அதுமட்டுமில்லாமல் புதிதாக வரும் இயக்குனர்களுக்கும் புதுப்புது நடிகர்களுக்கும் பல வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் என பலரும் கூறி நாம் கேட்டுள்ளோம்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு விஜயகாந்த் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார் இந்த நிலையில் சமீப காலமாக உடல் நலக்குறைவால் விஜயகாந்த் இருந்து வருகிறார். 2015 ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை அதேபோல் பொது நிகழ்ச்சியில் கூட விஜயகாந்த் கலந்து கொள்வது கிடையாது.

கைநிறைய அள்ளி அள்ளிக் கொடுத்த விஜயகாந்திற்கா இந்த நிலைமை என பலரும் கண்கலங்கி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்தை பிரபல நடிகை அவமானப்படுத்தியது குறித்து பேசி உள்ளார்.

அவர் அந்த வீடியோவில் கூறியதாவது நடிகை நதியா விஜயகாந்த் கருப்பாக இருப்பதால் அவருடன் நடிக்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார், கருப்பு நடிகர்களை நதியாவுக்கு பிடிக்காது எனவும் கூறியுள்ளார். அப்புறம் எப்படி சூப்பர் ஸ்டார் உடன் மட்டும் நடித்தார் என்றால் அவர் சூப்பர் ஸ்டார் அவருடன் நடிக்க மறுத்தால் சிக்கல் ஆகி விடும் என வற்புறுத்தி நடிக்க வைத்தார்களாம், அதனால்தான் ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார் நதியா.

அதேபோல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் இதனை அடுத்து நதியாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு பதிலடி கொடுக்க மலையாள நடிகை சோபனாவை தன்னுடைய இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்தார் விஜயகாந்த், நடிகர் விஜயகாந்த் அவர்களுடன் நடிக்க மாட்டேன், கட்டி பிடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன், ஒட்டி உரசி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார் அதனால்தான் கமலஹாசன் திரைப்படத்தில் நதியா நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அந்த காலத்தில் ட்ரெண்ட் செட்டராக இருந்த நதியா 50 வயதை கடந்தும் இன்னும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார் இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்க் அவுட் யோகா என பலவற்றை கடைபிடித்து வருகிறாராம்.

nadhiya
nadhiya