பொதுவாக சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து விட்டதாலும் உடல் எடை அதிகரித்து விட்டதாலும் பல நடிகைகள் சீரியல் பக்கம் தலை காட்டுவார்கள். ஆனால் தற்பொழுது சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சீரியலில் நடித்து வரும் பொழுது எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் பிரியா பவானி சங்கர் வாணி போஜன் ஆகிய நடிகைகள் சீரியலில் இருந்து சினிமா பக்கம் பயந்து விட்டார்கள்.
இந்த நிலையில் சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரித்திகா இவர் முதன்முதலில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கலசம் என்ற சீரியலில் சப்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வேறு யாரும் கிடையாது தமிழ்சினிமாவில் வெளியாகிய மதுரை டூ தேனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான்.
அதேபோல் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்திலும் இரண்டாம்கட்ட கதாநாயகியாக நடித்திருந்தார். என்னதான் இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் பெயர் சொல்லும் அளவிற்கு அந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை. ஆனால் சீரியல் பக்கம் திரும்பியதால் சீரியலில் இவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்தது.
அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நாதஸ்வரம் சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதுமட்டுமில்லாமல் நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து பல டிவி சேனல்களில் பணியாற்றியுள்ளார்.
பல டிவி சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ள இவர் குலதெய்வம் என்ற சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அதன் பிறகு சிறிது காலம் சீரியல் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த அவர் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை அப்பட்டமாக காட்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்பாவை சைடு போட்டு விடுவீங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.