ஒரு சில சீரியல்கள் மட்டும் முடிந்து பல வருடங்களான பிறகும் அந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு மவுசு இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற சீரியல் தான் நாதஸ்வரம்.
இந்த சீரியலில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.அந்த வகையில் காமு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பேன்ஷி பிரிங்க்ளின். இந்தத் தொடரைத் தொடர்ந்து கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்து இருந்தார்.
இவ்வாறு சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வந்த இவர் அக்கா, தங்கை, மனைவி என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் தனது கடந்த காலத்தில் நடந்த சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது இவருக்கு சின்ன வயது இருக்கும்பொழுது டான்ஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும் எனவே பரதநாட்டியம், குச்சுப்புடி ஆகிய நடனங்களை கற்றுக் கொண்டாராம். அதோடு இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என இவரின் அப்பா மிகவும் ஆசைப்பட்டாராம் அவர் இந்தியன் பேங்க் மேனேஜராம் எவ்வளவு வேலை இருந்தாலும் அதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என என்னை ஆடிஷனுக்கு அழைத்துச் செல்வாராம்.
அந்த வகையில் எப்படியாவது அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் செலக்ட் ஆனேன். பிறகு ஒரு கோரியோகிராபர் என்னம்மா இவ்வளவு குண்டா இருக்கிற நீ எதுக்கு இந்த போட்டியில எல்லாம் கலந்துக்குற என கேட்டதும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த ஆர்வம் போய் விட்டது எனவே வாய்ப்பு கிடைத்தும் அதனை மிஸ் செய்து விட்டேன்.
பிறகுதான் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன் இதன் மூலம் பிரபலமடைந்து பிறகு காலேஜ் படித்து முடித்த பிறகு சில முயற்சிகள் செய்து சீரியலின் நடிப்பதை தொடர்ந்தேன் பிறகு எனது சிறந்த நடிப்பு திறமையால் எனக்கு தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தேன் என கூறியிருந்தார்.