Nayanthara : அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி கல்யாணம் செய்து கொண்டனர்.
இவருடைய கல்யாணத்திற்கு பல சினிமா பிரபலங்கள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா குடும்பப் பொறுப்பை ஒரு பக்கம் ஏற்றிருந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
நயன்தாரா கைவசம் டெஸ்ட், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்கள் இருக்கின்றன. இதில் ஜவான் படம் பெரிய அளவில் எதிர்பார்க்க படுகிறது. காரணம் ஹிந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.
நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் சமயத்தில் காதல் கொண்டார். அவர் மீது கொண்ட காதலால் நானும் ரவுடிதான் படத்தை முடிக்காமல் இழுத்துக் கொண்டே போய் உள்ளார். இதனால் கடுப்பான படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் உங்க காதலுக்கு நான் தான் கிடைச்சனா என்று கூறி நானும் ரவுடிதான் படத்தை எடுக்க காசு தரவே இல்லையாம்..
பின் பல பஞ்சாயத்துக்கள் வைக்கப்பட்டு கடைசியாக தான் நானும் ரவுடிதான் படம் ரிலீஸ் ஆனதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தனுஷ் தலையிடலனா அவர் தலையிலேயே ஏறி மொளகா அரைச்சு இருப்பீங்க போல என கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.