நடிகர் தனுஷ் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே அது வேற மாதிரியாக தான் தெரியும் – உண்மையை போட்டு உடைத்த தனுஷின் ரீல் மகள்

naane-varuven
naane-varuven

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கிய நடித்திருக்கிறார். தாணு அவர்கள் இந்த படத்தை தயாரித்து இருந்தார் படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து பிரபு, யோகி பாபு, ஹிந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் தனுஷின் மகளாக ஹியா தவே நடித்திருந்தார். நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு மகளாக நடித்த ஹியா தவே தனுஷ் குறித்தும் அவர் பேசி உள்ளார். தனுஷ் ரொம்ப ஜாலியான டைப்..

செட்டுக்கு வந்தாலே ரொம்பவும் ஜாலியாக இருக்கும் அவர் ரொம்ப இயல்பாகவும் பெரிய நடிகர் என்கின்ற பந்தாவும் அவரிடம் கிடையாது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும் அவருடைய ரசிகர்களிடம் இயல்பாக பேசுவார் என்றார் மேலும் அவர் கூறுகையில் என்னை பார்த்தவுடன் வந்து ஹக் பண்ணுவார் அவரே மறந்து விட்டாலும் நானே அவரை கூப்பிட்டு ஹக் பண்ணுவேன்.

என்னுடைய ஹேர் ஸ்டைல் அவருக்கு ரொம்ப பிடிக்கும் நூடுல்ஸ் மாதிரி ரொம்ப சுறுசுறுல்லா இருக்கிறது என்று கூறுவார். நானே வருவேன் படத்தில் எனக்கு தனுஷ் வில்லனாக நடித்த கதாபாத்திரம் ரொம்பவும் பிடிக்கும் அதுவும் தீரா சூரா பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என கூறினார். அந்தப் பாடலை நான் எப்பொழுதுமே ஹம் செய்வேன்.

மேலும் பேசிய அவர்  கீழ்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் சஸ்கா சாட் னு ஒரு ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறோம் படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது நான் தனுஷுக்கு மோமோஸ், சாண்ட்விச், பாவ் பாஜி, ஆலு டிக்கி போன்ற உணவுகளை எடுத்து செல்வேன் என கூறினார். இந்த செய்தியை தற்போது இணையதளம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.