நடிகர் தனுஷ் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுப்பார். அதை அவரது படங்களிலேயே பார்க்க முடியும் அந்த வகையில் காதல் கொண்டேன், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, கர்ணன், அசுரன், ஜகமே தந்திரம் என பல படங்களில் மிரட்டி இருக்கிறார்.
இப்பொழுது கூட அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி தனது திறமையை காட்டி நடித்து வருகிறார் அந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் நடிகர் தனுஷின் மார்க்கெட் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் உடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எஸ் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் எஸ் கலைக்புலி பேட்டி ஒன்றில் நானே வருவேன் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தின் கதையை கூறும் பொழுது நான் சீட்டின் நுனியில் வந்து விட்டேன். நானே வருவேன் படத்தில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடிக்கிறார் தனுஷ்.
இந்த மாதிரியான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை திரையுலகம் பார்த்ததில்லை இந்த கதாபாத்திரத்தை வைத்தே நிறைய திரைப்படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது என கூறினார். தயாரிப்பாளர் எஸ் கலைப்புலி தாணு நானே வருவேன் படம் குறித்து தொடர்ந்து மிரட்டலான செய்திகளை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.