திருச்சிற்றம்பலம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன் இந்தப் படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். செல்வராகவன் இந்த படத்தை இயக்கி உள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
நானே வருவேன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கவர்ந்திழுக்க பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர், பாடல் போன்றவற்றை வெளியிட்டு உள்ளது இது ஒவ்வொன்றுமே ரசிகர்களை மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது நிச்சயம் நானே வருவேன் திரைப்படம் நன்றாக ஓடும்..
ஆனால் கலெக்ஷன் தான் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் தனுஷின் நானே வருவேன் படத்தை தொடர்ந்து அடுத்த நாளே வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது அதனால் நானே வருவேன் படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் படத்தை தயாரித்து உள்ள கலைப்புலி தாணு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே..
சுமார் 12 கோடி முதல் 15 கோடி வரை கண்டிப்பாக வசூலுக்கும் என கூறியுள்ளார் இந்த படம் நடிகர் தனுஷின் திரை வாழ்வில் அதிக அளவில் வெளிநாடு மற்றும் OTT உரிமம் விற்கப்பட்ட படம் என கூறியுள்ளார். தற்பொழுது இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் கூட சிறப்பாக தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.