“நான் ரெடி” பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனம் ஆடிய ஜி. பி. முத்து..! விஜய்க்கே ட்ஃப் கொப்பார் போல..

leo
leo

டிக் டாக் மூலம் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பரிட்சயமானவர் ஜி பி முத்து. இவரது எதார்த்தமான பேச்சு பலரையும் கட்டி இழுத்துள்ளது அதனால் இவரை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் ரசிகர்களும் அதிகமாகினர்.

ஒரு கட்டத்தில் ஜிபி முத்துக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

விஜய் டிவியில் மற்றொரு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்காவது சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டு காமெடி செய்து என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் படும் பிரபலம் மேலும் ஜிபி முத்துவின் காமெடிக்கு என சில ரசிகர்கள் இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி நான்காவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் லியோ படத்திலிருந்து வெளிவந்த “நான் ரெடி” பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

இதேபோல் காமெடி நடிகர் ஜி பி முத்துவும் நான் ரெடி பாடலுக்கு பனியன் லுங்கி உடன் கையில் குச்சி வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வருகின்றன.