2010ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் நான் மகான் அல்ல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது அதேபோல் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது அதுமட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் குடி போனவர் கீர்த்தி ஷெட்டி இவர் தெலுங்கில் தி வாரியர் என்ற திரைப்படத்தில் புல்லட் என்ற பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த இளசுகளை தனது பக்கம் கட்டி இழுத்து விட்டார் அந்த பாடலில் தனது வளைவு நெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
இவர் வேறு யாரும் கிடையாது கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என ஒட்டுமொத்த மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் வெறும் 18 வயதே ஆன இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்பொழுது பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். சூர்யா தன்னுடைய 41வது திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி அவர்களை இணைத்துள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் திரைப்படம் முதல் திரைப்படம் பெரிய ஹீரோவுடன் இணைந்துள்ளது ரசிகர்களுடைய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
சூர்யாவின் தம்பி கார்த்தி அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்பொழுது சூர்யா அவர்களுக்கு ஜோடியாக இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது ஆனாலும் நான் மகான் அல்ல திரைப்படத்தில் உண்மையிலும் அவர் தான் நடித்துள்ளார் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது இது குறித்து அவர் ஏதாவது வெளியே கூறினால் தான் தெரிய வரும்.