நான் மகான் அல்ல இரண்டாம் பாகம் மிரட்டல் வில்லனாக இவரை களமிறக்க போகிறாரா சுசீந்திரன்.!

naan mahaan alla
naan mahaan alla

naan mahaan alla 2nd part : தமிழ்சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் இவரின் திரைப்படத்திற்கு எப்பொழுதும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள், ஏனென்றால் இவரின் திரைப்படம் சமூகம் சார்ந்ததாகவும் விளையாட்டை சார்ந்ததாகவும் இருக்கும், அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் நான் மகான் அல்ல.

இந்த திரைப்படத்தில் கார்த்திக், காஜல் அகர்வால் ஆகியோர நடித்திருந்தார்கள் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, சுசீந்திரன் நல்ல இயக்குனர் தான் ஆனால் இவர் எடுத்த கடைசி சில திரைப்படங்கள் தோல்வியில் முடிந்தது.

இவர் கடைசியாக பாண்டியநாடு திரைப்படம் தான் வெற்றி படமாக கொடுத்தார், அதிலும் இவர் இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார் அந்த திரைப்படமும் தோல்வியில்தான் முடிந்தது, இப்படி தோல்வியை கொடுத்துவந்த சுசீந்தரன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தன்னுடைய பழைய பாணியிலேயே படத்தை எடுக்கலாம் என யோசித்து வருகிறார், அதாவது பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நேரத்தில் கார்த்திக்கு நான் மகான் அல்ல திரைப்படத்தை கொடுத்து வெற்றியை கொடுத்தார் இப்பொழுது அதே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என யோசித்து வருகிறார்.

ஆனால் நடிகர் கார்த்திக் சமீபகாலமாக நடித்த திரைப்படங்கள் ஹிட் அடித்ததால் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க முன் வருவாரா என்று தெரியவில்லை, அதேபோல் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு முன்னணி நடிகரும் முன்வர தயங்குகிறார்கள், ஏற்கனவே ராஜபட்டை என்ற திரைப்படத்தில் விக்ரம் நடித்தார் ஆனால் இன்றுவரை அவரால் எழுந்து நிற்க முடியவில்லை அதே நிலைமை தனக்கும் வந்துவிடும் என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யோசிக்கிறார்கள்.

கார்த்திக் மீண்டும் மனது வைத்தால் மட்டும் நடிக்கலாம், அப்படி கார்த்திக் ஒத்துவரவில்லை என்றால் மீண்டும் புது முகத்தை வைத்தே படத்தை எடுக்கலாம் என சுசீந்தரன் யோசித்து வருகிறார், நான் மகான் அல்ல திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும், அதனால் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க வைக்கலாம் என யோசிக்கிறார்,.

சுசீந்திரன் புதுமுகங்களை வைத்து படத்தை எடுக்கும் அனுபவம் அதிகமாக இருப்பதால் இவர் புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் படம் வெற்றி அடைந்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது, ஏனென்றால் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் விஷ்ணுவிஷால் அறிமுகப்படுத்தினார், அதேபோல் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமும் புதுமுகம்தான், அதுமட்டுமல்லாமல் அப்புக்குட்டியை ஹீரோவாக நடிக்க வைக்க வில்லையா அப்படி யாராவது ஒரு புதுமுகம் அமைய மாட்டார்களா என யோசிக்கிறார் சுசீந்திரன்.

எது எப்படியோ அடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற காலக் கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.