ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் ட்விஸ்ட் வைத்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.! செம ஷாக் தகவல்.

naam iruvar namaku iruvar
naam iruvar namaku iruvar

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கொரானா காரணத்தால் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் விஜய் டிவியில் கொரோனா பிரச்சனைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் பொழுது ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது. சில சீரியல்கள் முழுவதும் மாற்றப்பட்டு வேறு கதையுடன்  ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் முற்றிலும் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் கொரோனா பிரச்சனைக்கு பிறகு ஹீரோவான செந்திலை தவிர கதை மற்றும் நடிகர்,நடிகைகள் என அனைவரும் புதிதாக அறிமுகம் ஆனார்கள்.

அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் ரச்சிதா மஹாலக்ஷ்மி, ஜனனி நாயர் உட்பட இன்னும் பலர் அறிமுகமாகி உள்ளார்கள். இந்நிலையில் பல வாரங்களாக ஐஸ்வர்யா – முத்துராசு இவர்களின் திருமணத்தை பற்றி தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று ஒரு புறம் கூறிவருகிறார்கள்.  ஆனால் முத்துராசு கோவிலுக்கு செல்லும் பொழுது யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.

இதனைப் பார்த்த குடும்பத்தினர்கள் பெரும் அதிர்ச்சியில்  ஆழ்ந்துள்ளார்கள். இந்த காட்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.  எனவே கண்டிப்பாக ஐஸ்வர்யா மற்றும் முத்துராசு இவர்களின் திருமணம் நடைபெறும்.