கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களும் ஹீரோவாக நடித்து வெற்றியை காணுகின்றனர் அந்த வகையில் சந்தானம், யோகி பாபு, சதிஷ் ஆகிய அவர்களுக்கு முன்பே ஹீரோ பல வெற்றிகளை கொடுத்தவர் வைகைபுயல் வடிவேலு. முதலில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் பிறகு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் ஒவ்வொன்றாக எட்டிப் பார்த்தன..
சும்மா நடித்துப் பார்க்கும் என வடிவேலு நடித்தார். அது அவருக்கு வெற்றியை பெற்று தந்தது. அந்த வகையில் இம்சை அரசன் 23 -ம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் இருப்பினும் இம்சை அரசன் இரண்டாவது பாகத்தில் நடிக்கும் போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும் இவருக்கும்..
இடையே பிரச்சனை ஏற்பட தமிழ் சினிமா உலகில் நடிக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது ஒரு வழியாக நான்கு வருடங்கள் வருடங்கள் கழித்து பிரச்சனை எல்லாம் சுமூகமாக தீர்க்கப்பட்டு மீண்டும் கொடுத்து நடித்து வருகிறார் அதுவும் ஹீரோவாக நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் குவித்தது. முதலாவதாக சுராஜ் உடன் கைகோர்த்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் கைகோர்த்து ஷிவானி நாராயணன், சிவாங்கி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சஞ்சனா சிங், முனீஸ் காந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் அண்மையில் வெளிவந்து படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். காரணம் படத்தில் காமெடி அந்த அளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது இதனால் முதல் நாளே மோசமான வசூலை அள்ளி உள்ளது.
முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் நாய் சேகர் என்ட்ரன்ஸ் திரைப்படம் 1.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் போட்ட காசை எடுக்குமா என்பது தற்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த அடுத்த நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..