நாய் சேகர் ரிட்டன்ஸ் மண்ணை கவ்வ முக்கிய காரணமே இவங்க தான் – கோபத்தை கொட்டிய வடிவேலு.!

naai sekar returns
naai sekar returns

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் காமெடி என்றாலே நம் மனதிற்கு முதலில் வருவது வைகைப்புயல் வடிவேல் தான். இவர் ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்

ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாகவும் இந்திரலோகத்தில் நான் அழகப்பன், 23ஆம் புலிகேசி, எலி போன்ற சில படங்களை கொடுத்தார். இப்படி ஓடிக் கொண்டிருந்த வடிவேல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.

வடிவேலு நடிப்பில் இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு  பிறகு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சுராஜ் இயக்கிய நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, சஞ்சனா, மனோ பாலா போன்ற பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் ஒரு காமெடி கலாட்டா நிறைந்த படமாக உருவாகி வெளிவந்தது. லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்த இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ்  படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் வடிவேலு ஒரு பேட்டியில் இது பற்றி பேசி உள்ளார். அவர் பேசியது,

“யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம். திறந்த வெளி கக்கூஸ் போல் ஆகி விட்டது. இதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் அசிங்க அசிங்கமா பேசுறாங்க தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறார் படத்தையும் அப்படித்தான் சொன்னாங்க. மக்கள் வதந்தியை எல்லாம் நம்ப கூடாது என்னால முடியல என வடிவேலு ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.