தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் என்ற பெயர் எடுத்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு. இவரின் பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி சென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் வடிவேலு எப்பொழுது நடிப்பார் என ஏங்கிய ரசிகர்களும் உண்டு அந்த அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
செந்தில் கவுண்டமணி இல்லாத திரைப்படங்களை ஒரு காலத்தில் ரசிகர்கள் பார்க்க மறுப்பார்கள் அதேபோல் இடையில் வடிவேல் இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு உயர்ந்தவர். தான் சும்மா இருந்தாலும் தன் வாய் பேச்சால் தன்னுடைய சினிமா கேரியருக்கு ஆப்பு வைத்துக் கொண்டார் அதேபோல் வடிவேல் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது. தன்னுடைய வாயால் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருக்க நேர்ந்தது.
அதன் பிறகு வடிவேலு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக கை கொடுக்கவில்லை பிறகு மீண்டும் சங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் சங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது அதனால் வடிவேலுக்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு பிரச்சனை முத்தியது.
அதன் பிறகு அந்தப் பிரச்சினை எல்லாம் முடிந்த பிறகு வடிவேலு மீண்டும் பிஸியாக நடித்து வந்தார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை அடையவில்லை இதனால் பலரும் செம அப்செட் ஆனார்கள்.
இந்த நிலையில் வடிவேலு மீண்டு வந்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தார் ஆனால் இதன் மூலம் மண்ணை கவ்வ ஆரம்பித்தார் அதனால் தற்பொழுது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவை தான் தற்போது எடுத்து உள்ளாராம் இனி பழைய மாதிரி ஹீரோ திரைப்படத்தில் காமெடியனாக நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.