நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் ஒரு அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார். காரணம் சிறப்பான படங்களை ஒரு பக்கம் கொடுப்பது மறு பக்கம் எப்பொழுதும் நேர்மையாக இருப்பதால் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நபராக இருக்கிறார்.
அஜித் தற்போது தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மலையாள நடிகை மஞ்சுவாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
முதல்கட்ட ஷூட்டிங் 52 நாட்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பைக்கில் வலம் வந்தார். அதன் புகைப்படங்கள் வேற லெவல் இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட சூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் அஜித் ஒரு புதிய கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் குமார் பற்றி ஒரு சூப்பரான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமா உலகில் தற்போது அம்மா சித்தி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தும் சரண்யா பொன்வண்ணன் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் சொன்னது தங்கத்திலும் தங்கம் அஜித், குழந்தைக்கு குழந்தை மாதிரி, சமையலில் வில்லாதி வில்லன்மொத்தத்தில் கடவுள் என அஜித்தை புகழ்ந்து பேசி அசத்தினார் சொல்லப்போனால் சினிமா உலகில் இப்படி ஒரு அற்புதமான மனிதராக அவர் ஒருவர் மட்டுமே இருப்பதாக புகழ்ந்து பேசி அசத்தினார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.