தொடர்ந்து பல மர்மமான திருட்டு சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் மேலும் தற்போது திரைப்பிரபலங்கள் வீட்டிலும் திரட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பொதுவாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் லட்சுக்கணக்கில் சம்பளம் வாங்கி வருவதனால் அவர்களுடைய வீட்டில் வேலை புரிபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
மேலும் ஒரு சில பிரபலங்கள் பணம் இருந்தால் கூட வீட்டில் வேலை செய்பவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்து வருவதால் அவர்களுக்கே தெரியாமல் திருட ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து அவருடைய வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை நடத்த பிறகு ஈஸ்வரி என்ற பணிப்பெண் மற்றும் கார் டிரைவர் இணைந்து திருடி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது பிறகு 100சவரன் நகைகளை பின் பணியாளர் திருடி இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பல வருடங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பணிபுரிந்து வருவதாகவும் ஆனால் அவர் குறைவான சம்பளம் மட்டுமே தருவதாகவும் மாடு மாதிரி உழைத்தால் கூட அதிக சம்பளம் தராத காரணத்தினால் இவ்வாறு செய்ய ஆரம்பித்ததாகவும் அந்த பணிப்பெண் வாக்குமூலம் கொடுத்து இருந்தால் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல வாரிசு நடிகரின் வீட்டில் நகைகள் மாயமாகியுள்ளது அதாவது 80களில் காலகட்டத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடகராக வலம் வந்தவர் தான் யேசுதாஸ். இவருடைய மகன் விஜய் யேசுதாஸ் சினிமாவில் பாடுவது, திரைப்படங்கள் நடிப்பது என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனுஷின் மாரி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் மலையாளத்தில் கோளம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் நிலையில் இவருடைய வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 100 சவரன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருப்பதாகவும் திடீரென காணாமல் போனதாகவும் காவல்துறையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா புகார் அளித்துள்ளர். எனவே தற்பொழுது காவல்துறையினர் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் சோதனை நேரத்தில் வருகின்றனர் இவ்வாறு தொடர்ந்து திரைப் பிரபலங்களின் வீட்டில் மாயமாக போவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.