உங்களைப் போலவே.. நானும் அந்த காட்சியை பார்க்கவே இல்லை.. பிசாசு 2 படம் குறித்து பேசிய மிஷ்கின்.!

andrea
andrea

நடிகை ஆண்ட்ரியா சினிமா உலகில் பாடகர் ஆகவும், நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு நடிகையாக தொடர்ந்து சூப்பரான படங்களில் நடித்து அசதி வருகிறார். அந்த வகையில் இதுவரை இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, மாஸ்டர், மங்காத்தா என சொல்லிக் கொண்டே போகலாம் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இப்பொழுது கூட விஷ்ணுடன் முதல் முறையாக கைகோர்த்து பிசாசு 2 என்ற படத்தில் நடித்துள்ளார் அதுவும் இந்த படத்தில் ஆண்ட்ரியா மெயின் ரோலில் நடித்துள்ளார் இந்த படம் வேற லெவலில் உருவாகியுள்ளதாக ஆண்ட்ரியா மிஸ்கின் மற்றும் பல பிரபலங்கள் கூறி வந்தனர். மேலும் ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் தேசிய விருதை பெற்று தரும் அந்த அளவிற்கு மிக பயங்கரமாக நடித்துள்ளார் என கூறினார்.

இந்த படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா சில காட்சிகளுக்காக நி***மாக நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அந்த காட்சிகளை நீக்கி விட்டோம் என படத்தின் இயக்குனர் மிஷ்கின் கூறி உள்ளார். குழந்தைகளும் இந்த படத்தை பார்ப்பார்கள் அதனால் இந்த காட்சி வைத்தால் சரிப்பட்டு வராது..

மேலும் இது இருந்தால் ஏ சர்டிபிகேட் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட படக்குழு இந்த காட்சியை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது அந்த போட்டோக்களை நான் கூட பார்க்கவில்லை அதையெல்லாம் நீக்கும்படி போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டேன் என மிஷ்கின் கூறி உள்ளார்.

ஆண்ட்ரியா நி***மாக நடித்த காட்சிகளை ஆண்ட்ரியாவுக்கு பொதுவான நண்பர் போட்டோகிராபர் சுந்தர் என்பவரை வைத்து தான் எடுத்தோம் அவரையே அந்த காட்சிகளை டெலிட் பண்ண சொல்லிவிட்டேன் என கூறினார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.