தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக மசாலா திரைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்த இயக்குனர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்தான் மிஸ்கின். இவர் தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்டு போனார் என்று கூறலாம்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெரைட்டி வெரைட்டியாக திரைப் படங்களை கொடுத்தவர். ஆரம்பத்தில் பல திரைப்படங்களை கொடுத்தாலும் இடையில் பல சுமாரான படங்களையும் கொடுத்துள்ளார், ஆனால் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் எந்த திரைப்படத்தையும் படுதோல்வி என கூற முடியாது முகமூடி திரைப்படத்தை தவிர.
அதையும் அவரே படுதோல்வி என ஒத்துக் கொண்டார், ஒரு பேட்டியில் அவர் ஆவணத்தில் எடுத்த திரைப்படம் அழிந்ததை கண் கூட பார்த்ததாக பெருமையுடன் தெரிவித்தார். இதனால் மிஸ்கின் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து எடுத்த திரைப்படம் சைக்கோ. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது மிஷ்கின் தன்னுடைய பழைய திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார், சைகோ திரைப்படத்திற்கு முன்பு மிஸ்கின் பாலா தயாரிப்பில் பிசாசு திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து பிசாசு 2 திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார், மேலும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் பூர்ணா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் டி முருகானந்தம் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.