சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் நந்தினி, இவர் தற்பொழுது ரியாலிட்டி ஷோ சீரியல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார், மைனா நந்தினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்தநிலையில் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் பின்பு கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார் அதனால் நந்தினி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
அதன்பிறகு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மைன நந்தினியை சமாதானப்படுத்தினார்கள், பின்பு அதிலிருந்து விடுபட்டு சீரியலில் மீண்டும் சிறப்பாக நடித்து வந்தார், தற்பொழுது நந்தினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது கணவருடன் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சமீபத்தில்கூட மொட்டைமடியில் தன்னுடைய கணவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் தற்பொழுது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார், இந்த நிலையில் இவர் மிகவும் சோர்வாக கன்னத்தில் கை வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு இப்படி சந்தோசமாக இல்லாமல் சோகமாக இருக்கிறீர்கள் என திட்டி தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் என்ன கவலையாக இருந்தாலும் பரவாயில்லை சந்தோஷமாக இருங்கள் இதுபோல் நேரத்தில் என அறிவுரை கூறி வருகிறார்கள்.