துள்ளிக் குதித்து விளையாடும் மைனா நந்தினியின் மகன் – அதுக்குள்ள இவ்ளோ வளர்ந்துட்டாரே.! வைரலாகும் புகைப்படம்.

maina

பிரபல  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை நந்தினி. மேலும் இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைனா என்பதால் மக்களிடையே நல்ல ரீச் அடைந்து இவருக்கு மைனா நந்தினி என்ற செல்லப் பெயரும் உண்டு.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் பணிபுரிந்தார். பின்பு இவர் வெள்ளித்திரையில் தர்மபிரபு, நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3, வம்சம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியுள்ளார் இப்படி சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் குடும்ப வாழ்க்கையில் சின்னத்திரை நடிகர்  யோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் கூட யோகேஷ் மற்றும் மைனா நந்தினி இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர்களது அன்பை சிறப்பாக வெளிப்படுத்தி மற்றும் அந்த நிகழ்ச்சியில் வைத்த போட்டிகளை எல்லாம் சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் பல ரசிகர்கள் உருவாகின. இந்த நிலையில்  நடிகை மைனா நந்தினி தொடர்ந்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். மேலும் அவரது மகனின் புகைப்படம் அல்லது அவரது மகன் செய்யும் குறும்பு தனம் போன்றவற்றை வீடியோவாக எடுத்து இதே தளத்தில் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது மைனா நந்தினி அவரது மகன் விளையாடும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நந்தினியின் மகனா இது நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

maina
maina