தமிழ் சினிமாவில் நடித்து வரும் மயில்சாமி இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் தாவணிக்கனவுகள் என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆன மயில்சாமி அதன்பிறகு குணச்சித்திரம் காமெடி போன்ற ரோல்களில் நடித்து தனக்கான இடத்தை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
திரை உலகில் தற்போது டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் மயில்சாமிக்கு இன்னும் திரை உலகில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது சினிமாவையும் தாண்டி அரசியல் ஆர்வமும் இவருக்கு அதிகம் உண்டு.
அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நின்று தோற்றுப் போனார் மயில்சாமி. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது சமூக பிரச்சனைகள் மற்றும் அதற்காக குரல் கொடுத்துவருகிறார்.
இந்த நிலைமையில் மயில்சாமி தனக்கு பிடித்த விஜய்யின் பிகில் படத்தில் வரும் ராயப்பன் தோற்றம் போன்று மாறி நடிகர் மயில்சாமி வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தை ஆட்டிப்படைக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய்யின் ராயப்பனின் அப்பா போலவே மயில்சாமி இருப்பதாக புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.