தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ்,செல்வராகவன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படக்குழு தற்போது டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த படங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமா உலகில் சிறப்பாக ஓடினாலும் மறுபக்கம் குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது மனைவி மற்றும் காதல் குறித்து வெளிப்படையாக பேசிய தகவல் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதில் அவர் சொன்னது காதலிச்சு கல்யாணம் பண்றது ஒரு வகை கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கிறது மற்றொரு வகை நான் அதில் இரண்டாவது ஜாதி காதலிக்காக கல்யாணம் பண்ண பொண்ணு தேடுற..
ஒவ்வொரு பையனுக்கும் இருக்குற எதிர்பார்ப்பு நம்ம அம்மா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கும் என்பதுதான் நான் எதிர்பார்த்தது போலவே அதே பாசம், கோபம், அன்பு, கண்டிப்பு சங்கீதா கிட்ட இருக்கு சங்கீதா எனக்கு இன்னொரு அம்மா என கூறி முடித்தார்.
நடிகர் விஜய் இவ்வாறு பேசியது தளபதி ரசிகர்களும் தாண்டி மக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது பரவாயில்லை சினிமாவையும் தாண்டி குடும்பத்தையும் சிறப்பாக நேசித்து வாழ்ந்து வருகிறார் என கூறிய ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.