என்னோட டார்கெட் நயன்தாரா சிம்ரன் தான்.! கமலுக்கு ஆப்பு வைக்க பார்க்கும் ஜிபி முத்து..

gp-muthu
gp-muthu

பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து ரியாலிடி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு தற்பொழுது உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏராளமான போட்டியாளர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி உள்ளது.

இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கும் நிலையில் மிகவும் அதிரடியாக அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடி வருகிறார்கள். 20 போட்டியாளர்களில் ஒருவர்தான் ஜி பி முத்து யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும் இவர் தான் இந்த சீசனின் வெற்றியாளர் எனவும் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய வெகுளித்தனமான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்து வருகிறது மேலும் ஜிபி முத்து கமலஹாசன் உடன் மிகவும் ஜாலியாக பேசி வருகிறார் அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நிலையில் அவர் ஜிபி முத்து விடாம் உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கேட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜிபி முத்து நயன்தாரா, சிம்ரன் இவர்கள் இருவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை எனக் கூற உடனே கமல் என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பாக்குறீங்களே என்று கூறியுள்ளார். இவ்வாறு இவர் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே இரண்டு ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கலாய்க்கப்பட்டு வருகிறது.