தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் மலையாள சினிமாவில் நடித்து தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் படங்களில் தொடர்ந்து நடித்து தனது திறமையை வெளி காட்டி வருவர் நடிகை ப்ரியங்கா அருள் மோகன்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் முதலில் நடித்து அறிமுகமானார். முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக டாக்டர் படம் அமைந்தது அதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாக இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு பேட்டி கொடுத்து வருகிறார்.
அதில் ஒன்றாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ப்ரியங்கா அருள் மோகனிடம் அஜித்துடன் இணைந்து எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதேசமயம் தளபதி விஜயுடன் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசை என கேட்டனர் அதற்கு அவர் விஜய் சாருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்கவும், அஜித் சாருடன் மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் ஆசையாக இருப்பதாகக் கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே சூர்யா, சிவகார்த்திகேயன் தொடர்ந்து தற்போது உச்ச நட்சத்திரங்களாக இயக்கும் அஜீத், விஜய்யுடன் இவர் நடிக்க ஆசை தெரிவித்துள்ளது மற்ற நடிகைகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.