விக்ரம் திரைப்படத்தில் இந்த காட்சியின் போது என் அடிவயிறு கலங்கி விட்டது..! நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

vijaysethupathi-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் இந்த திரைப்படத்தில் நடித்த சந்தனம் என்ற நெகட்டிவ் கதாபாத்திரமான ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டுமில்லாமல் பிரமிக்க வைத்தது.

ஒரு நடிகர் ஹீரோவாக நடித்து விட்டால் அதன் பிறகு துணை நடிகர் வில்லன் கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருவார்கள் ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது தான் ஹீரோவாக நடித்தாலும் சரி எப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் சரி அவை அவருக்கு பிடித்தது என்றால் கண்டிப்பாக நடித்து கொடுப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இவர் நடித்த காட்சியை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகர் தான் நடித்த விக்ரம் திரைப்படத்தில் தன்னுடைய என்ட்ரி  காட்சிகள் ஆட்டோவில் சட்டை இல்லாமல் வெளியே வரும்படி அமைந்திருக்கும்.  இவ்வாறு இந்த காட்சியை பார்த்து விஜய் சேதுபதி அவர்கள் ரசிகர்கள் என்னை நல்ல கலாய்க்க போகிறார்கள் என கூறி இருந்தார்.

vijay sethupathi-1
vijay sethupathi-1

ஆனால் இந்த காட்சி இடம்பெறும் போது தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது மட்டுமில்லாமல் பிரம்மாண்டமாக கொண்டாடி விட்டார்கள்.  ஆனால் விஜய் சேதுபதி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்தார் என்றால் அது நம்ப முடியவில்லை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் துணிந்து நடிக்கக்கூடிய விஜய் சேதுபதி யோசித்தார் என்பது  நம்பக் கூடிய விஷயமாக இல்லை என்று ரசிகர்கள்  தெரிவித்துள்ளார்கள்.