விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மீரா மிதுன். இந்நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கி பாதியிலேயே இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பிறகு தற்பொழுது தமிழ் சினிமாவில் சர்ச்சை மற்றும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் எந்த விஷயம் நடந்தாலும் அதை சர்ச்சையாக மாற்றுவதில் வல்லமை வாய்ந்தவர் என்று தான் கூற வேண்டும்.அந்த வகையில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் உட்பட இன்னும் ஏராளமான பல நடிகர்களின் மீது சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை கிளப்னார்.
அந்த வகையில் சூர்யா மற்றும் விஜய் ஆகியோர்களுக்கு மன்னிப்பு கேட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மாற்றம் சமந்தா உட்பட இன்னும் பல நடிகைகள் மீது தனது முகத்தை இவர்கள் அனைவரும் திருடுகிறார்கள் என்று கூறினார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது ரசிகர்கள் இவரை கண்டபடி திட்டி வருகிறார்கள். எந்த நல்ல விஷயம் மற்றும் கெட்ட விஷயமாக இருந்தாலும் அதை சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்திருப்பதால் பலர் கொலை வெறியில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கானா பாடலாக வலம் வந்து கொண்டிருப்பது குக்கு குக்கூ பாடல் தான். இந்தப் பாடல் வெளியாகி சில வாரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் பாடல் இவ்வளவு ஹிட் ஆகியும் கூட மீராமிதுன் இன்னும் இந்த பாடலை பற்றி எந்த சர்ச்சையும் ஏற்படுத்தவில்லையே என்று நினைத்து வந்த நிலையில் தற்பொழுது குக்கூ குக்கூ பாடலை பாடியவர் வேறுயாருமில்லை சந்தோஷ் நாராயணனின் மகள் தான்.
அந்த வகையில் மீராமிதுன் சந்தோஷ் நாராயணன் உங்களுடைய மகள் பாட்டு நல்லா பண்ணட்டும் பாடட்டும் அதுக்கு ஏன் என்னோட பாடலை கடைசியில் தள்ள பாக்குறீங்க. உங்களுடைய பொண்ணு இப்ப கூட என்னுடைய face makeup தான் யூஸ் பண்றங்க என்று கூறியியுள்ளார்.
இதைவிட மிகவும் காமெடியான விஷயம் என்னவென்றால் நான் மிகவும் அழகானவள், நடிப்பு திறமை உடையவள், சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மீரா மிதுனை அங்கமாக கேலி செய்து வருகிறார்கள்.