என்னுடைய உண்மையான பெயர் சூரி கிடையாது.? இதுதான்.? அதிர்ச்சியான ரசிகர்கள்.

soori-
soori-

திறமை இருந்தாலும் பட வாய்ப்பையே கைப்பற்ற ஒரு நடிகர் சினிமா உலகில் படாத பாடு பட வேண்டும் அதுதான் உண்மையான முதலில் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரையும் சந்தித்து ஒரு வழியாக படத்தில் ஒரு சின்ன ரோல் வாங்கி அதில் தனது திறமையை காட்டி படிப்படியாக வளர முடியும் அப்படித்தான் நடிகர் சூரியும் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க படாதபாடு பட்டார்.

முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் காரணமாக படிப்படியாக வளர்ச்சி அடைந்தார். அதை தக்க வைத்துக் கொள்ள தமிழ்சினிமாவில் கடினமாக உழைத்தார். ஒரு கட்டத்தில் தனது முக்கிய படங்களில் காமெடியனாக நடித்து அசத்தினார் அது மக்களுக்கு பிடித்துப்போகவே தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக சூரி.

இப்பொழுது  டாப் நடிகர்கள் சசூர்யா, அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடிப்பதால் அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சினிமா உலகில் சம்பாதிக்கின்ற காசை சேர்த்து வைத்துக் கொள்ளாமல் அதை இரண்டு மடங்காக உயர்த்த பல்வேறு ஹோட்டல்களிலும் பல்வேறு பிசினஸ்களிலும் ஈடுபட்டு அதில் சம்பாதித்து வெற்றி கண்டு வருகிறார்.

நடிகர் சூரி கடைசியாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இப்பொழுது சூர்யாவுடன் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் அண்ணாத்த திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய உண்மையான பெயர் சூரி கிடையாது எனக் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

காமெடி நடிகர் சூரியின்  உண்மையான பெயர் ராம் லஷ்மன்  ஆனால் இவரோ ரஜினியின் தீவிர ரசிகராக இருந்தார்.  ரஜினி நடிப்பில் தளபதி படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது தளபதி படத்தில் ரஜினியின் பெயர் சூர்யா அதற்காக தனது பெயரை நடிகர் சூர்யா என முதலில் பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அந்த பெயர் சூரி என அழைக்கப்பட்டதால் அதையே தற்போது வரை வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார்.