சினிமா உலகில் தற்போது வேண்டுமானால் டாப் இயக்குனராக பல இயக்குனர்கள் இருக்கலாம் ஆனால் அந்த இயக்குனர்கள் ஆரம்ப காலகட்டத்தில் பல பிரச்சனை மற்றும் சர்ச்சைகளை சந்தித்தது தான் இந்த இடத்தை பிடித்துள்ளனர் அந்த வகையில் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி இவர் இதுவரை பையா, ஆனந்தம், சண்டக்கோழி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சிக்கலில் இருந்ததால் லிங்குசாமி ஒரு காலகட்டத்திலும் இயக்குனராக பணியாற்றாமல் சிறிது காலம் பணக் கஷ்டத்தில் இருந்தார் ஆனால் தற்போது இந்த சிக்கல்களை முடித்து வெளியே வந்து தற்பொழுது படங்களை இயக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அவர் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த பிரச்சினைகள் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது லிங்குசாமி இயக்குனர் பாக்கியராஜ் பார்த்துதான் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை வந்ததாம் சென்னைக்கு வந்து பாக்யராஜ் உடன் இணைந்து அவரது உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவரது கனவு ஆனால் அது சுத்தமாக நடைபெறாமல் போனது.
பக்யராஜ் காக பல வருடங்கள் கழித்து இருந்தாலும் அது ஒரு வழியிலும் செட்டாகாது உணர்ந்து கொண்ட லிங்குசாமி ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அதன்பிறகு தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
இப்பவும் பாக்யராஜ் சந்தித்தால் கூட மறைமுகமாக கேட்பது உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று தான் கேட்பாராம். ஆனால் இதுவரை பாக்கியராஜ் லிங்குசாமியும் ஒரு தடவை கூட இணைந்து பணியாற்ற வில்லை என்பது அவரது கேரியரில் மிக வருத்தமான ஒன்றாக இருப்பதாக லிங்குசாமி தெரிவிக்கிறார்.