தமிழ் சினிமாவில் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
ஆரம்பத்தில் வெற்றியை மட்டும் கண்டு வந்த நடிகர் ஜெய் அவர்கள் அதன் பிறகு அவர் தேர்வு செய்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியை மட்டும் சந்தித்து வந்தது அதன்பிறகு அவருக்கு கைகொடுத்த திரைப்படம் என்றால் அது ராஜா ராணி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலம் ஏகபோக வரவேற்ப்பை பெற்ற நமது நடிகர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜெய் அவர்கள் தான் சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தபோது பல்வேறு புதுமுக இயக்குனர்கள் தன்னிடம் கதை கூறியதாகவும் அப்போது தல அஜித் என்னிடம் நெருக்கமாக இருந்ததன் காரணமாக அந்த கதைகளை நான் தல அஜித் சாரிடம் கூறினேன்.
அப்போது தல அஜித் அவர்கள் சுப்பிரமணியபுரம் படத்தின் கதையை கேட்டு இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் எண்பதுகளில் உள்ள கதை போல் இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் நீ என்னடி என்று சொன்னார். இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தில் நானும் நடித்தேன் அதேபோல இயக்குனர் சசிகுமாரும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
பொதுவாக நடிகர் ஜெய் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது சுப்பிரமணியபுரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்துக்கு பிறகாக அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு வர தொடங்கியது மட்டுமில்லாமல் சினிமாவிலும் பிரபலமாக இருக்கக் வழிவகுத்துக் கொடுத்தது.
இவ்வாறு நடந்த அந்த சம்பவத்தை 14 வருடங்களுக்கு பிறகு தற்போது பேட்டியில் இதை அவர்கள் கூறியுள்ளார். பொதுவாக தல அஜித் மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் அவ்வப்போது இளம் நடிகர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.